PAN Card Delay -Reasons for getting delay of PAN Card

PAN Card Delay

PAN Card Delay- Here we have discussed the most popular resons for getting delay of your PAN Card.You can rectify this problem by submitting corrected Aadhaar.

நீங்கள் விண்ணப்பிக்கும் பான்கார்டு தாமதமாக காரணம் : ( Reasons for PAN Card Delay)


 புதிய பான்கார்டு விண்ணப்பிக்கும் போது இதற்க்கு முன்பு வேறு எங்கேனும் பான்கார்டுக்காக விண்ணப்பித்துள்ளீர்களா என்ற விபரத்தை விண்ணப்பத்தை பெறுபவரிடம் தெரியப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படவோ / கால தாமதம் ஏற்படவோ வாய்ப்பு உள்ளது.

 ஆதார் கார்டை சான்றாக கொடுத்து விண்ணப்பிக்கும் போது பான் கார்டு கிடைக்கப்பெறும் வரை உங்கள் ஆதார் கார்டில் உள்ள தகவல்களில் மாற்றங்கள் ஏதும் நிகழாமல் பார்த்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

 நீங்கள் விண்ணப்பிக்கும் பான்கார்டு Application Receiving > Processing > Verifying > Income Tax Section (For Pan Allotment) > Printing > Dispatch & Delivery போன்ற பல நிலைகள் கடந்து உங்கள் கைகளில் வந்து சேருகிறது . இதில் ஏதேனும் ஒரு நிலையில் ஏற்படும் கால தாமதத்தினால் உங்களுக்கு பான்கார்டு கிடைக்க தாமதமாகலாம்.

பான்கார்டு விண்ணப்பிக்கும் போது நீங்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்கள் போதுமானதாக இல்லை என அதனை சரிபார்ப்பவர்கள் (NSDL / UTI / Income Tax Department) கருதும் பட்சத்தில் வேறு ஆவணங்கள் கேட்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் கால தாமதம் ஆக வாய்ப்புள்ளது .

 பான்கார்டு விண்ணப்பிக்கும்போது கொடுக்கும் போட்டோ மற்றும் ஆவணங்கள் ஸ்கேன் செய்யும் போது தெளிவற்ற நிலையில் இருக்கும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாமல் நிலுவையில் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் கூட உங்களுக்கு பான்கார்டு கிடைக்க கால தாமதம் ஏற்படலாம்.


பான்கார்டு விண்ணப்பிக்கும் போது நீங்கள் செய்ய வேண்டியவை :

 பான் கார்டுக்காக விண்ணப்பிக்கும் போது உங்கள் ஆதார் அட்டை அல்லது ஆதார் பதிவு செய்தற்கான ஒப்புகை சீட்டின் நகலை கட்டாயம் சமர்பிக்க வேண்டும்

 பான் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு முன் உங்கள் ஆதார் அட்டை மற்றும் இதர சான்றுகளில் உள்ள தகவல்களை சரிபார்த்து உறுதிப்படுத்தி கொள்ளவும்.

 பான் விண்ணப்பத்துடன் நீங்கள் சமர்ப்பிக்கும் போட்டோ மற்றும் தேவையான சான்றுகளின் நகல்கள் தெளிவாக இருத்தல் அவசியம்.

 விண்ணப்பம் செய்பவர் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் விண்ணப்பதாரரின் சான்றுகளோடு அவருடைய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சான்றும் சேர்த்து இணைக்கப்பட வேண்டும்

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்பிப்பதற்கு முன் நகல் எடுத்து வைத்துக்கொள்வது சிறந்தது.

 முகவரி சான்றில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கே பான்கார்டு அனுப்பி வைக்கப்படும். எனவே தற்போது வசித்து வரும் முகவரியும், முகவரி சான்றில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியும் வேறுபடாமல் இருத்தல் அவசியம்.

 பான்கார்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது உங்களுக்கு ஒரு ஒப்புகை சீட்டு அதாவது Acknowledgement Number உடனே வழங்கப்படும். இல்லையேல் விண்ணப்பிக்கும் இடத்தில் அதற்கான ஒப்புகை சீட்டினை உடனே கேட்டு பெறவும்.

 உங்களுடைய பான் கார்டு எந்த தடையும் இன்றி சரியான தகவல்களுடன் உங்கள் கைகளில் கிடைக்கப்பெறும் வரை அந்த ஒப்புகை சீட்டினை பத்திரமாக வைத்து கொள்வது அவசியமாகும்.

 ஒப்புகை சீட்டின் குறிப்பிடப்பட்டுள்ள எண் மூலமாக உங்கள் பாண் கார்டின் விண்ணப்ப நிலையை இணையதளம் மூலமாகவோ, எங்களிடம் தொலைபேசி வாயிலாகவோ, வாட்சாப் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்.

 பான்கார்டு விண்ணப்பித்து சராசரியாக 10-25 வேலை நாட்களுக்குள் உங்கள் கைகளில் வந்து சேரும். இல்லையேல் நீங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த அலுவலகத்தை தொடர்பு கொண்டு உங்கள் விண்ணப்ப நிலையை அறிந்து கொள்வது நல்லது.

Know about Education Loan Vidyalakshmi – Apply Online

Know how to link the following online?

How to Link AadhaarCard-Mobile Number? 

How to add yourAadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAARand PAN card with LIC?

How to add yourAadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land inTamilnadu?

You may be interested in TNPDS Online-SmartCard-Ration Card-Know everything

Check this Building ContractQuestions to be asked before Signing a Contract

You may be interested in Know about CarpetArea-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our GovernmentCorner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor PostsSubmission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*