
TN SCERT YouTube videos about News Syllabus
TN SCERT YouTube videos :- TN SCERT release self learning videos about new syllabus. This videos will help the students those who are not going for tuition.
350 வீடியோ பாடங்கள்: மாணவர்களுக்கென வெளியீடு
TN SCERT YouTube videos
பிளஸ் 1, பிளஸ் 2 மாண வர்கள், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், அரசின் சார்பில், 350, ‘வீடியோ’ பாடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சராக, செங்கோட்டையன், செயலராக, உதயசந்திரன், முதன்மை செயலராக, பிரதீப் யாதவ் ஆகியோர் பதவியேற்ற பின், இத்துறையில், புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. செயலர், உதயசந்திரன், சமீபத்தில், வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவுப் படி, அவர் தலைமையிலான குழுக்கள் உருவாக்கிய, புதிய பாடத்திட்டம், மாணவர்கள் மற்றும் கல்வி யாளர்கள் மத்தியில், வரவேற்பை பெற்றுள்ளன.இந்த பாடங்களை படித்து, பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற, மாணவர்கள் பலர், தனியார் மையங்களில், சிறப்பு பயிற்சி பெறுகின்றனர்.
டியூஷன்
ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களால், ‘டியூஷன்’ செல்ல முடியவில்லை. அவர்களின் வசதிக்காக, தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில், இணையதளத்தில் சிறப்பு பயிற்சி பாடங்கள், வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளன.அவற்றை, ‘கூகுள்’ மற்றும், ‘யூ டியூப்’ தளங்களில், TNSCERT என்ற பெயரில் பெறலாம்.
இந்த தளத்தில், இயற்பி யல், கணிதம், வேதியியல், உயிரியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில், 350 வீடியோ பதிவுகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடத்தையும், எளிதாக புரிந்து படிக்கும் வழிகளும், அவற்றில் கூறப்பட்டுள்ளன.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், இந்த, யூ டியூப் சேனல் இயக்கப்படுகிறது. தற்போது, பள்ளிக்கல்வி இயக்குனராக உள்ள, ராமேஸ்வர முருகன் மேற்பார்வையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், இந்த சேனல் துவங்கப்பட்டது. முதலில், தொடக்க பள்ளி மாணவர்களுக்கான பாடங்கள் மட்டும் வெளியிடப்பட்டன.
தயாரிப்பு குழு
தற்போது, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளி மேற்பார்வையில், தனியாக, வீடியோ பாட தயாரிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழுவைச் சேர்ந்த, ஆசிரியர், ஜெரோம் கூறியதாவது:புதிய பாடங்கள், மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில், வீடியோ பாடங்களாக தயாரிக்கப்படுகின்றன. நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், சேவை அடிப்படையில், இந்த பணியில் ஈடுபட்டுஉள்ளனர். அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், கட்டணமின்றி, இந்த சேவையை பயன்படுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.- நமது நிருபர் –











You ca visit Official Link from here :- https://www.youtube.com/channel/UC7GbVKqHPXww1acL1x9DNQw/videos
Thanks – Dinamalar.com
Did you know how to link the following online?
How to Link Aadhaar Card-Mobile Number?
How to add your Aadhaar card to Ration card?-Tnpds
How to Link AADHAAR and PAN card with LIC?
How to add your Aadhaar card to Ration card?-Tnpds
You may be interested in below articles :-
Did you checked this How to apply Patta for land in Tamilnadu?
You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything
Check this Building Contract Questions to be asked before Signing a Contract
You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area
Our Popular Kadhambam Pages :-
If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs
Visit our Tour Corner to know more visa related information’s/Articles.
Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.
View Technology corner for more technology news.
Post your article in the given link. Visitor Posts Submission Page
Leave a Reply