Upcoming TN School Public exam 2019 dates & Schedules announced

Public exam 2019 - Senkottaiyan

Upcoming TN School Public exam 2019 dates and Schedules announced

School Public exam 2019 :-

School education Minister  Mr.Sengottaiyan announced the Upcoming School Public exam 2019 – dates for Exam Schedules and Result in advance. He announced from 10th . +1 and 12th exam dates details. Here we gave you in details.

வரும் கல்வி ஆண்டுக்கான பள்ளி பொது தேர்வுகளுக்கான தேதிகள்  மற்றும் தேர்வு அட்டவணை அறிவிப்பு…

ரிசல்ட்தேதியும் முன்கூட்டியே வெளியீடு…

அடுத்த ஆண்டில் நடக்க உள்ள, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகளை, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார்.

கடந்த ஆண்டை போலவே, நடப்பு கல்வி ஆண்டு துவக்கத்திலேயே, பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் தேதிகளையும், அவற்றின் முடிவுகள் வெளியாகும் தேதிகளையும், அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி, தயார் செய்துள்ளார். அதை, சென்னை, தலைமை செயலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்.

* அதன்படி, பிளஸ் 2 தேர்வு, 2019 மார்ச், 1ல் துவங்கி, 19ல் முடிகிறது. தேர்வு முடிவுகள், ஏப்., 19ல் வெளியாகின்றன. பிளஸ் 1 தேர்வு, மார்ச், 6ல் துவங்கி, 22ல் முடிகிறது.

தேர்வு முடிவுகள், மே, 8ல் வெளியாகின்றன. 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 14ல் துவங்கி, 29ல் முடிகிறது. ஏப்., 29ல், தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன

* கடந்த ஆண்டு, பிளஸ் 1ல், 600 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதியவர்கள், இந்த ஆண்டு பிளஸ் 2 படிக்கின்றனர். அவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், இரண்டரை மணி நேரம் தேர்வு நடத்தப்படும்

* கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 படித்து, 1,200 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதி, சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, பழைய முறைப்படி, ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 200 மதிப்பெண் வீதம், 1,200 மதிப்பெண்களுக்கு, மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்படும். இரண்டு பிரிவினருக்கும், காலையில் தேர்வு துவங்கி, மதியம் முடியும்

* இந்த ஆண்டு, புதிதாக அமலுக்கு வந்துள்ள, மொழி பாடத்தாள் குறைப்புப்படி, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும், பழைய, புதிய மாணவர்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், ஒரு தாளுக்கு மட்டுமே, தேர்வு நடத்தப்படும்

இது தொடர்பாக பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் 2019 மார்ச் 1 முதல் மார்ச் 19ம் தேதி வரை நடக்கும். தேர்வு முடிவு 19.4.19 அன்று வெளியிடப்படும்.

பிளஸ் 1 பொதுத்தேர்வு 06.03.19 முதல் 22.03.19 வரை நடக்கும். தேர்வு முடிவு 8.5.19 அன்று வெளியிடப்படும்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 14.3.19 முதல் 29.3.19 வரை நடக்கும். தேர்வு முடிவுகள் 29.4.19 அன்று வெளியிடப்படும்.

மாணவர்கள், தேர்வுக்கு முன்கூட்டியே தயாராகும் வகையில, தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றார்.

 

Public exam 2019 -Schedule

12ம் வகுப்பு மார்ச் 2019ம் ஆண்டு பொதுத்தேர்வு அட்டவணை – 

புதிய தேர்வு முறை – 2.30 மணி நேரம்

01/03/2019
மொழி பாடம்

05/03/82019
ஆங்கிலம்

07/03/2019
கணிதம், விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரீஷியன் டயட்டிக்ஸ்,டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், புட் மேனேஜ்மெண்ட் அண்ட் சைல்ட் கேர், அக்ரிகல்ச்சுரல்பிராக்டிஸ், நர்ஸிங், நர்ஸிங் வொகேஷ்னல்

11/03/2019
இயற்பியல், பொருளாதாரம், ஜென்ரல் மிஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ், எக்யூப்மெண்ட்ஸ்,டிராட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிக்கல் மிஷின்ஸ் அண்ட் அப்லையன்சஸ், ஆட்டோமெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலாஜி

13/03/2019
வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

15/03/2019
கம்யூனிகேடிவ் இங்கிலிஷ், இந்தியன் கல்ச்சர், கம்பியூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி,அட்வான்ஸ்ட் லேங்குவேஜ், ஹோம் சயின்ஸ், பொலிடிக்கல் சயின்ஸ், ஸ்டாடிக்ஸ்

19/03/2019
உயிரியல், தாவரவியல், வரலாறு, பிஸ்னஸ் மேக்ஸ், ஆப்பிஸ் மேனேஜ்மெண்ட்,அகௌண்டன்ஸி அண்ட் ஆடிட்டிங்

இதே நாட்களில் பழைய தேர்வு முறை அரியர் தேர்வுகளும் நடத்தப்படும் (3 மணி நேரம்)

11ம் வகுப்பு மார்ச் 2019ம் ஆண்டு போதுத்தேர்வு அட்டவணை

புதிய தேர்வு முறை – 2.30 மணி நேரம்

06/03/2019
மொழி பாடம்

08/03/2019
ஆங்கிலம்

12/03/2019
கணிதம், விலங்கியல், காமர்ஸ், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரீஷியன் டயட்டிக்ஸ்,டெக்ஸ்டைல்ஸ் அண்ட் டிரஸ் டிசைனிங், புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், அக்ரிகல்ச்சுரல்சயின்ஸ், நர்ஸிங் (ஜென்ரல்), நர்ஸிங் வொகேஷ்னல்

14/03/2019
இயற்பியல், பொருளாதாரம், கம்பியூட்டர் டெக்னாலஜி

18/03/2019
உயிரியல், தாவரவியல், வரலாறு, பிஸ்னஸ் மேத்தமெட்டிக்ஸ் அண்ட் ஸ்டாடிஸ்டிக்ஸ்,பேசிக் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், பேசிக்சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக்மெக்கானிக்கல் இன்ஜினியரிங், ஆப்பிஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் செக்ரட்ரிஷிப்

20/03/2019
வேதியியல், அகௌண்டன்ஸி, புவியியல்

22/03/2019
கம்யூனிகேடிவ் இங்கிலிஷ், எதிக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர், கம்பியூட்டர் சயின்ஸ்,கம்பியூட்டர் அப்லிகேஷன்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்ட் லேங்குவேஜ், ஹோம்சயின்ஸ், பொலிடிக்கல் சயின்ஸ், ஸ்டாடிஸ்டிக்ஸ்

இதே நாட்களில் பழைய தேர்வு முறை அரியர் தேர்வுகளும் நடத்தப்படும் (3 மணி நேரம்)

 

10ம் வகுப்பு மார்ச் 2019ம் ஆண்டு போதுத்தேர்வு அட்டவணை

(2.30 மணி நேரம்)


14/03/2019
 – மொழி பாடம் 1ம் தாள்

18/03/2019 – மொழி பாடம் 2ம் தாள்

20/03/2019 – ஆங்கிலம் 1ம் தாள்

22/03/2019 – ஆங்கிலம் 2ம் தாள்

23/03/2019 – ஆப்ஷ்னல் லேங்குவேஜ்

25/03/2019 – கணிதம்

27/03/2019 – அறிவியல்

29/03/2019 – சமூக அறிவியல்

Source and Thanks to: Dinamalar.com


Did you know how to link the following online?

How to Link Aadhaar Card-Mobile Number? 

How to add your Aadhaar card to Ration card?-Tnpds

How to Link AADHAAR and PAN card with LIC?

How to add your Aadhaar card to Ration card?-Tnpds


You may be interested in below articles :-

Did you checked this  How to apply Patta for land in Tamilnadu?

You may be interested in TNPDS Online-Smart Card-Ration Card-Know everything

Check this Building Contract Questions to be asked before Signing a Contract

You may be interested in Know about Carpet Area-Built Up Area -Super Built Up Area


Our Popular Kadhambam Pages :-

If you are looking for a Government job visit our Government job corner by clicking this link. Government Jobs

Visit our Tour Corner to know more visa related information’s/Articles.

Visit our Government Corner for more information’s related to Indian Government and Tamil Nadu Government.

View Technology corner for more technology news.

Post your article in the given link. Visitor Posts Submission Page

Recommded Articles for You

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*